மூன்றாவது தளத்தில் இருந்து குழந்தைகளை வெளியே வீசிய கொடூர தாய்!

Report

தனது இரண்டு குழந்தைகளையும் வீட்டுக்கு வெளியே தூக்கி வீசிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், Bondy நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இங்கு வசிக்கும் பெண் ஒருவர் தாம் வசிக்கும் மூன்றாவது தளத்தில் இருந்து தனது இரண்டு குழந்தைகளையும் ஜன்னல் வழியாக தூக்கி வெளியே வீசியுள்ளார். உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மூன்று வயதுடைய இரண்டாவது குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிய முடிகிறது. பின்னர், உடனடியாக காவல்துறையினரால் 31 வயதுடைய தாய் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இது தொடர்பில் அவரிடம் விசாரிக்கப்பட்ட போது, <<அவை சாத்தானின் குழந்தைகள். அவற்றை வைத்திருக்கும் போது சாத்தானை வைத்திருப்பதாக உணர்கிறேன்>> என தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

807 total views