காட்டில் 6 மாத கர்ப்பிணிப் பெண்ணை சூறையாடிய நாய்கள்.... சடலத்தை கண்டு கதறிய கணவன்

Report

காட்டுப்பகுதியில் நடைப்பயிற்சிக்கு சென்றகொண்டிருந்த ஆறு மாத கர்ப்பிணிப் பெண்ணை நாய்கள் கடித்து கொன்றுள்ளதாக அவரது கணவர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் காட்டுப்பகுதியில் வைத்து கர்ப்பிணி பெண்ணொருவர் நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நகரில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 29 வயதான குறித்த கர்ப்பிணிப் பெண் கடந்த சனிக்கிழமை தமது நாயுடன் காட்டுக்குள் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அவர் வேறு சில நாய்களால் தாக்கப்பட்டதாகவும் அதில் அவர் கடுமையாகக் காயமடைந்ததாகவும் உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கைகளிலும், கால்களிலும், தலையிலும் பல இடங்களில் நாய்கள் கடித்த காயங்கள் பலமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிற நாய்களால் தாக்கப்படுவதைத் தமது கணவருக்குத் தெரிவித்த அந்தப் பெண், அவர் காப்பாற்ற வருவதற்கு முன்னரே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பல கோணங்களில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கர்ப்பிணி மனைவியை இழப்பானது, கணவனை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

3367 total views