டிரம்ப்க்கு நெஞ்சு வலியா? மருத்துவர் கூறிய அதிர்ச்சி பதில்!

Report

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டதாக வெளிவந்த தகவல் பொய்யானது என்று அவரது மருத்துவர் ஷான் கான்லே (Sean Conley) கூறியுள்ளார்.

நெஞ்சு வலி காரணமாக வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அதிபர் டிரம்ப் சிகிச்சை பெற்றுக்கொண்டதாகப் பரவிய தகவல்களை அவர் நிராகரித்தார்.

73 வயதான அதிபர் டிரம்ப் கடந்த சனிக்கிழமை சாதாரண மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொண்டார் என்று அவர் தெரிவித்தார்.

பரிசோதனை அதிபரின் கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அது திட்டமிட்ட படி நடந்ததாகவும் மருத்துவர் கூறினார்.

அதிபர் டிரம்ப்பின் உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் உள்ளது என்றும் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ராணுவ வீரரிடம் அவர் நலம் விசாரித்தார் என்றும் கான்லே கூறினார்.

3952 total views