முகத்தில் வால் உடைய விசித்திர நாய்க்குட்டி! வேகமாக பரவும் புகைப்படம்

Report

அமெரிக்காவில் முகத்தில் வால் உடைய விசித்திர நாய்க்குட்டியை தன்னார்வ கால்நடை ஆதரவு அமைப்பொன்று தெருவில் இருந்து மீட்டு பராமரித்து வருகிறது.

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் கான்சாஸ் நகர தெருவில் குறித்த நாய்க்குட்டி மீட்கப்பட்டுள்ளது. மிசோரியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ கால்நடை பராமரிப்பு அமைப்பான ‘மாக்’ அமைப்பு இந்த நாயை மீட்டு பராமரித்து வருகிறது.

இது தொடர்பாக, இந்த அமைப்பின் நிறுவனர் ஸ்டெபான் கூறுகையில், ‘7 ஆண்டுகளாக இந்த அமைப்பு, சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறது.

குறிப்பாக, ஐந்து கால்கள் உடைய நாய்கள், பிறப்பிலேயே உடலுறுப்பு வளர்ச்சி இல்லாத பல நாய்களை கவனத்தில் எடுத்து பராமரித்துள்ளோம்.

ஆனால், இம்மாதிரி முகத்தில் வால் உள்ள நாய்க்குட்டியை நான் பார்த்ததே இல்லை. கான்சாஸ் நகர தெருவில் சென்று கொண்டிருந்த போது தெருவோரத்தில் பனியில் இந்த குட்டி உறைந்து கிடந்தது. உடனே அதை மீட்டேன். அதற்கு நார்வால் என பெயரிட்டுள்ளேன் என்றார்.

714 total views