டிரம்ப்பின் உத்தரவுக்கு அமையவே உக்ரைனுக்கு அழுத்தம்!

Report

ஜோ பைடனுக்கு எதிரான விசாரணைகளின் நிமித்தம் டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கிணங்கவே உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொனால்ட் ட்ரம்பின் பிரத்தியேக சட்டத்தரணி Rudy Giulianiஇடமிருந்து இதற்கான நேரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உக்ரைனின் புதிய ஜனாதிபதி Volodymyr Zelensky ஐ ட்ரம்ப் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மாற்றீடாக இராணுவ உதவிகளை வழங்க ட்ரம்ப் இணங்கினாரா என்பதனை உறுதிப்படுத்தும் பொருட்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் இலாபத்துக்காக வெளிநாட்டு உதவிகளை பெறுவது அமெரிக்காவில் சட்டவிரோதமானதாகும்.

இந்நிலையில், இந்த விசாரணைகளில் பல சாட்சிகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அரசியல் ரீதியில் கட்டமைக்கப்பட்டவை எனவும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

680 total views