அல்ஜீரியாவில் மக்கள் போராட்டம் தீவிரம்!

Report

அல்ஜீரியாவில் பாரியளவிலான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அல்ஜீரியாவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.

இதனை இரத்துச் செய்யுமாறு கோரியே தொடர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்ஜீரியாவின் பிரதான வீதிகளில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்றிருந்தனர்.

அல்ஜீரியாவில் இராணுவ ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

675 total views