மெக்சிகோ அதி பயங்கர துப்பாக்கி சூடு - 14 பேர் பலி!

Report

மெக்சிகோவில் நடந்த அதி பயங்கர துப்பாக்கி சண்டையில் 14 பேர் பலியாகினர்.

மெக்சிகோவின் கோகுய்லா மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

ஆயுதம் ஏந்தி செயல்பட்டு வரும் இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், கோகுய்லா மாகாணத்தின் வில்லா யூனியன் நகரில் அரசு ஊழியர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போதைப்பொருள் கடத்தல்காரர்களை சுற்றிவளைத்து தாக்கினர்.

இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

அதே போல், பாதுகாப்பு படையினர் 4 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

2130 total views