சீனாவில் கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு புதிய சட்டம்!

Report

புதிய தொழில்நுட்பங்களை நாளுக்கு நாள் கையாண்டு வரும் சீனா, கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு முகத்தை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்கவுள்ளது.

நாட்டிலுள்ள மில்லியன் கணக்கான இணையதள பயனாளர்களின் அடையாளங்களை அதிகாரிகள் சரி பார்ப்பதற்கு இந்த திட்டம் நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.

இணையத்தை பயன்படுத்து குடிமக்களின் சட்டபூர்வ உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க விரும்புவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக சீன அரசு விளக்கம் அளித்துள்ளது.

புதிய கைப்பேசி சேவை அல்லது புதிய தரவுகளை பதிவிறக்கும் வசதியை பெற மக்கள் முயலும்போது அவர்களின் தேசிய அடையாள அட்டையை வழங்க வேண்டும்.

அவர்கள் புகைப்படமும் எடுக்கப்படுகிறார்கள்.ஆனால், மக்கள் வழங்குகின்ற அடையாள அட்டையோடு, அவர்களது அடையாளங்கள் ஒத்து போகின்றனவா என்பதை பார்க்க அவர்களின் முகம் இப்போது ஸ்கேன் செய்யப்படும்.

இணையத்தில் மக்கள் ஏதாவது பதிவிட வேண்டுமானால் அர்களின் உண்மையான அடையாளத்தை சரிபார்க்கும் புதிய விதியை சீனா கடந்த 2017ஆம் ஆண்டு அமுலாக்கியமை குறிப்பிடத்தக்கது.

1680 total views