ரஷ்ய மாடல் அழகியின் வாழ்வில் நேர்ந்த சோகம்...... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அரண்மனை ரகசியம்!

Report

சுல்தானுடன் ஒக்சானா லியோலொடினோ மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ரஷ்ய இணையதளத்தில் வெளியானது.

இந்நிலையில், நவம்பரில் திருமணம் செய்து கொண்ட சுல்தானின் மனைவிக்கு மே மாதத்தில் குழந்தை பிறந்தது.

மலேசியாவில் பதினைந்தாவது சுல்தான் தனது இளம் மனைவியை விவாகரத்து செய்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அதற்கு முக்கிய காரணம் அவர்களின் திருமண உறவில் ஏற்பட்ட அந்த நம்பமுடியாத சுவாரஸ்யமான சம்பவம் தான் என்கின்றனர்.

அப்படி என்ன அந்த சுவாரஸ்யம் என்று கேட்கிறீர்களா.? திருமணமான ஆறே மாதத்தில் இளவரசிக்கு குழந்தை பிறந்தது தான் அந்த சுவாரசியம்.

அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா.? அதற்குச் சொல்லப்படும் காரணங்கள் தான் சுல்தானின் வீட்டில் ஏற்பட்ட குழப்பத்திற்கு காரணம்.

அதாவது மலேசியாவின் சுல்தான் முகமது, 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரஷ்ய மாடல் அழகியான ஒக்சானா லியோலொடினோவை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், அது மலேசியாவின் சட்டத்திற்கு முரணாக இருந்ததால் மீண்டும் ரஷ்யாவில் வைத்து வெளிப்படையாக திருமணம் செய்து கொண்டார் என சொல்லப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து, சுல்தானின் மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தி பத்திரிகைகளில் வேகமாக பரவியது, அதற்கு ஆதாரமாக சுல்தானுடன் ஒக்சானா லியோலொடினோ மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ரஷ்ய இணையதளத்தில் வெளியானது.

இந்நிலையில், நவம்பரில் திருமணம் செய்து கொண்ட சுல்தானின் மனைவிக்கு மே மாதத்தில் குழந்தை பிறந்தது. அதாவது திருமணமாகி ஆறு மாதத்தில் குழந்தை பிறந்ததால், அது மிக பெரிய செய்தியாக பரவியது.

இதை பலர் ஆச்சரியமாக விமர்சிக்கத் தொடங்கினர். திருமணமான ஆறு மாதத்தில் குழந்தை பிறப்பது எப்படி சாத்தியம் , என்று பேச்சுக்கள் வந்ததால் தனது காதல் மனைவியை சுல்தான் விவாகரத்து செய்ததுடன், தனது சுல்தான் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார் .

இந்நிலையில், தனது மாடல் தொழிலுக்கே மீண்டும் சென்றுள்ள ஒக்சானா லியோலொடினோ யார் என்ன சொன்னாலும் தன் குழந்தையின் உடலில் ஓடுவது " ராயல் பிளட் " தான் என்றும் சுல்தானே என்னுடைய மகனின் தந்தையென்றும் கூறுகிறார்.

தங்களின் திருமணத்தை அவர் தாமதமாக அறிவித்ததே எல்லா குழப்பத்திற்கு காரணம் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், பிரச்சனையில் அடுத்தடுத்த நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

5045 total views