சர்ச்சைக்குரிய சட்டம் ரத்து - அவுஸ்ரேலியா அறிவிப்பு!

Report

நோய்வாய்ப்பட்ட அகதிகளை கடலில் தடுத்து வைத்திருக்க அனுமதிக்கும் சட்டத்தினை அவுஸ்ரேலியா ரத்து செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அவுஸ்ரேலியாவில் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், இந்த சட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் எனவும் இது மனிதாபிமானம் அற்ற ஒரு செயற்பாடு எனவும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.

குறித்த சட்டமூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், கடும் எதிர்ப்புகளையும் மீறி இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே, பல்வேறு விமர்சனங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் குறித்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் ஊடாக நோய்வாய்ப்பட்ட அகதிகள் அவுஸ்ரேலியாவில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

683 total views