3வது மாடியிலிருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை....கையில் பிடித்த வாலிபர்! வேகமாக பரவும் காணொளி

Report

டாமன்- டையூ யூனியன் பிரதேசத்தில், 3ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தையை தரையில் நின்றவர்கள் லாவகமாக கைகளில் தாங்கிப்பிடித்து காப்பாற்றிய காணொளி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 வயது ஆண் குழந்தை ஒன்று, 3ஆவது மாடியிலிருந்து தவறி, 2ஆவது மாடியில் உள்ள வீட்டின் ஜன்னலில் சிக்கிக்கொண்டு சிறிது நேரம் அந்தரத்தில் தொங்கியுள்ளது.

தரைலிருந்து இந்த பதைபதைக்கும் காட்சியை பார்த்த சிலர், உடனடியாக சுதாரித்துக் கொண்டு, குழந்தை தொங்கிக்கொண்டிருக்கும் பகுதிக்கு நேராக நின்று, குழந்தை கீழ் நோக்கி நழுவியதும் கைகளில் தாங்கிப்பிடித்தனர். இதனால் குழந்தை நல்வாய்ப்பாக காயங்கள் இன்றி தப்பியது.

1725 total views