சூடான் நாட்டின் செராமிக் தொழிற்சாலையில் அதி பயங்கர தீ விபத்து!

Report

சூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான காணொளி காட்சி வெளியாகியுள்ளது.

தலைநகர் கார்டோமில் அமைந்துள்ள செராமிக் தொழிற்சாலையில், வழக்கம்போல தொழிலாளர்கள் பணிகளை மேற்கொண்டபோது, அங்கு நின்று கொண்டிருந்த எரிபொருள் நிரம்பிய டேங்கர் லாரி ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் ஏற்பட்ட தீ, தொழிற்சாலை முழுவதும் பரவியதை அடுத்து, தொழிலாளர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஆலையைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.

இந்த விபத்தில், 23 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் 130 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

442 total views