கால­நிலை மாற்­ற அனர்த்­தங்­கள் - 20 மில்­லியன் பேர் இடம்­பெ­யர்வு!

Report

கால­நிலை மாற்றத்தால் அதி­க­ரித்து வரும் இயற்கை அனர்த்­தங்கள் கார­ண­மாக ஒவ்­வொரு வரு­டமும் 20 மில்­லியன் பேர் தமது வீடு ­வா­சல்­களை இழந்து இடம்­பெ­யரும் நிர்ப்­பந்­தத்­திற்­குள்­ளாகி வரு­வ­தா­கவும் இதன் பிர­காரம் ஒவ்­வொரு இரு செக்­கன்­க­ளுக்கும் இருவர் என்ற வகையில் இடம்­பெ­யர்வு இடம்­பெற்று வரு­வ­தா­கவும் புதிய ஆய்­வொன்று தெரி­விக்­கி­றது.

பூகோள ரீதி­யான அனர்த்­தங்கள் மற்றும் மோதல்­களால் இடம்­பெ­று­வதை விடவும் வெள்ளங்கள், சூறா­வ­ளிகள் மற்றும் காட்டுத் தீ சம்­ப­வங்­களால் அதி­க­ளவான மனித இடம்­பெ­யர்­வுகள் இடம்­பெற்று வரு­வ­தாக தொண்டு ஸ்தாப­ன­மான ஒக்ஸ்பாம் இன்­டர்­ந­ஷனல் நிறு­வ­னத்தால் வெளியி­டப்­பட்ட மேற்­படி ஆய்­வ­றிக்கை கூறு­கி­றது.

2008ஆம் ஆண்­டுக்கும் 2018ஆம் ஆண்­டுக்­கு­மி­டை­யி­லான காலப் பகு­தியில் சூறா­வ­ளிகள் மற்றும் புயல்­களால் 90 சத­வீ­த­மான இடம்­பெ­யர்­வுகள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் மோச­மான கால­ நி­லை­யால் செல்­வந்த நாடு­களைச் சேர்ந்­த­வர்­களை விடவும் இந்­தியா, நைஜீ­ரியா, பொலி­வியா போன்ற தாழ்ந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் நான்கு மடங்கிற்கும் அதிக மான அளவில் இடம்பெயர்ந்து வீடு வாசலற்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

553 total views