சிறுமின் வீடு தேடி சென்று கை கொடுத்த அபுதாபி இளவரசர்: சுவாரஸ்ய பதிவு!

Report

நிகழ்ச்சியொன்றில், அபுதாபி இளவரசருக்கு கைகொடுக்க முடியாமல் ஏமாற்றமடைந்த சிறுமி ஒருவரை, இளவரசரே வீடு தேடி சென்று சந்தித்துள்ளார்.

அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட இளவரசர் சேக் மொகமது பின் ஸாயத், அங்கிருந்த சிறுமிகளுக்கு வரிசையாக கைகொடுத்துக்கொண்டே வந்தார்.

அப்போது, ஒரு சிறுமியை மட்டும் அவர் கவனிக்காமல் சென்றுவிட்டார். இதனால் அந்த சிறுமி ஏமாற்றமடைந்தார்.

இந்த சம்பவம் தனது கவனத்துக்கு வந்ததையடுத்து, ஆயிசா எனும் அந்த சிறுமியின் இல்லத்துக்கே சென்ற அபுதாபி இளவரசர் சிறுமியைச் சந்தித்து தனது பாசத்தை வெளிப்படுத்தினார். சிறுமியின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்தார்.

1546 total views