சிரியாவில் 8 குழந்தைகள் உயிரை பறித்த வான்வழித் தாக்குதல்!

Report

சிரியாவின் வடக்குப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகாத நிலையில் துருக்கி இராணுவம் குர்திஷ் படைகளுக்கு எதிராக சிரியாவின் வடக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதால் அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக, சிரியாவின் வடமேற்குப் பகுதியில் இவ்வார தொடக்கத்தில் துருக்கி இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.

துருக்கி எல்லையை அண்மித்த சிரியாவில் குர்திஷ் போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் எனக்கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்ட நிலையில் அங்கு துருக்கி படை கடும் தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதல் காரணமாக சுமார் 4 இலட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி இராணுவம் குர்திஷ் படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

667 total views