படுக்கையறையில் சிறுவன் தினமும் கொடுத்த தொல்லை! பெற்றோரால் கொலை செய்யப்பட்ட கொடூரம்

Report

சிறுவனது உடலை வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்து விட்டதாக தெரிகிறது .

படுக்கையில் சிறுநீர் கழித்த ஐந்து வயது சிறுவனை அவனது பெற்றோர்களை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ ப்ரூயண்ட், ஜோயன் குன்னிங்கம் தம்பதியர் இவர்களுக்கு ஏஜே ஆண்ட்ரூ என்ற 5 வயது மகன் இருந்தான், அடிக்கடி சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழிப்பது வழக்காம இருந்துள்ளது .

சம்பவத்தன்றும் வழக்கம் போல சிறுவன் தான் உடுத்தியிருந்த உடையிலேயே சிறுநீர் கழித்துள்ளான், இதனால் ஆத்திரமடைந்த தாய் ஜோயன் சிறுவனை பலமாக தாக்கியுள்ளார் .

அதில் வலி தாங்க முடியாமல் சிறுவன் துடித்து கதறினான், பின்னர் அவனது தந்தை வந்தவுடன் அவரிடம் தன் தாய் தாக்கியது குறித்து புகார் தெரிவித்தான்.ஆனால், தந்தை சிறுவன் சிறு நீர் கழித்ததற்காக கோபமடைந்து சிறுவனை அவரது பங்குக்கும் சரமாரியாக தாக்கியுள்ளார் .இதில் பலத்த காயமடைந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் .

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியர் யாருக்கும் தெரியாமல் சிறுவனது உடலை வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்து விட்டதாக தெரிகிறது . பின்னர் இதுகுறித்து தகவலறிந்த பொலிஸார் சிறுவனின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் விசாரணையில் சிறுவனின் தாய் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது , சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக ஜோயனுக்கு 20 முதல் 60 ஆண்டுகளை வரை சிறைத்தண்டனை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்நிலையில், அடுத்தமாதம் தந்தை ஆண்ட்ரூக்கு நீதிமன்றம் தண்டனை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது .

23478 total views