போன் பேசியபடியே தண்டவாளத்தில் விழுந்த வாலிபர் -சில நொடிகளில் ரயில் வந்தது

Report

அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் ஜரஸ் என்ற பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் செல்போன் பார்த்தவாறே நடந்து சென்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதாக ப்ளாட்ஃபாரத்தில் இருந்து தவறி ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

இதனைப் பார்த்த, அருகில் இருந்தவர்கள் உடனே கை கொடுத்து அவரை மீட்டுள்ளனர். அப்போது அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வந்தது.

இதனால், சில நொடிகளில் அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, குறித்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

1995 total views