இந்து கோவிலில் காலடி எடுத்து வைத்த இங்கிலாந்து பிரதமர்!

Report

இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் இந்து கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் புதிய இந்தியாவுக்கான மோடியின் முயற்சியை ஆதரிப்பதாக அறிவித்தார்.

இங்கிலாந்து நாட்டில் வருகிற வியாழக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் போட்டியிடுகிறார்.

இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளியினர் ஓட்டுகளை கவருவதற்காக சனிக்கிழமை போரிஸ் ஜான்சன் தனது தோழி கேரி சைமண்ட்ஸ் உடன் வடமேற்கு லண்டனில் உள்ள பிரபல இந்து கோவிலான சுவாமிநாராயண் கோவிலுக்கு சென்றார்.

முதலாவது அதிகாரப்பூர்வ பிரசாரத்தை தொடங்கியுள்ள சைமண்ட்ஸ் கோவிலுக்கு இளஞ்சிவப்பு நிற பட்டுசேலை அணிந்து சென்றார்.

ஜான்சன் கூறும்போது, பிரதமர் மோடி புதிய இந்தியாவை கட்டமைத்து வருவது எனக்கு தெரியும். இங்கிலாந்து அரசு அவரது முயற்சிகளுக்கு முழு ஆதரவு அளிக்கும் என்றார்.

3609 total views