சிறுத்தையோடு நேருக்கு நேர் மோதிய மான் குட்டி....வேகமாக பரவும் காணொளி

Report

சிறுத்தையிடம் சிக்கிய மான்குட்டி தைரியமாக அந்த புலியை ஓங்கி ஓங்கி முட்டி தாக்கியது. இந்த காணொளி காட்சி தென் ஆப்பிரிக்காவில் உள்ள குருங்கர் தேசிய பூங்காவில் வனவிலங்கு ஆர்வலர் ஆண்ட்ரோ ப்யூரியே என்பவரால் எடுக்கப்பட்டுள்ளது.

மாலை நேரத்தில் நையலா என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்க இன மான் குட்டி ஒன்று காட்டில் நடந்து வந்தது. அப்போது, பாதையில் சிறுத்தை அங்கு படுத்திருந்தது.

இதை கண்டு அச்சம் கொள்ளாமல் அந்த மான் குட்டி தப்பிப்பதற்காக அடுத்தடுத்து அந்த சிறுத்தையை ஓங்கி ஓங்கி முட்டியது. இதை கண்டு அமைதியாக இருந்த சிறுத்தை முட்டும் வரை முட்டவிட்டுவிட்டு அதன்பிறகு மான்குட்டியுடன் சிறிது நேரம் விளையாட ஆரம்பித்தது.

இதனால், பயம் கொள்ளாமல் சிறுத்தையை மீண்டும் மீண்டும் வந்த அந்த மான் குட்டி முட்டி தனது எதிர்ப்பை தெரிவித்தது.

இப்படியே ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நடந்த நிலையில் கடைசியில் சிறுத்தை அமைதியை கைவிட்டு விட்டு ஒரே கடிதான் கடித்தது.

பரிதாபமாக மான்குட்டி உயிரிழந்தது. அதன்பிறகு அந்த மான்குட்டியை சிறுத்தை தனது வாயில் கவ்விக்கொண்டு தூக்கிச்சென்றது.

இந்த காணொளி எடுத்த பியூரி கூறுகையில் சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிவதால் வேட்டைகளை கண்டு உணர்ச்சி வசப்பட மாட்டேன்.

ஆனால், என்னுடன் வந்தவர்கள் இந்த காட்சியை நம்ப முடியாத அளவுக்கு சுவராஸ்யமாக கண்டனர். ஏனெனில் இதுவரை அவர்கள் பாத்திராத கேள்விப்படாத ஒரு சம்பவம் இது என அவர்கள் கூறினார்கள் என்று தெரிவித்தார்.

622 total views