பெரு நாட்டில் விநோத போட்டி ஆரம்பம்!

Report

பெரு நாட்டில் நடைபெற்ற சக போட்டியாளர்களின் கன்னத்தில் வேகமாக அறையும் விநோத போட்டியில் 16 பேர் கலந்து கொண்டனர்.

அமெரிக்கா, ரஷ்யா நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற இப்போட்டி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன்முறையாக பெரு நாட்டில் நடத்தப்பட்டது.

இதில், போட்டியாளர்கள் தங்களது பலத்தை வெளிப்படுத்தும் வகையில் பரஸ்பரம் வேகமாக கன்னத்தில் அறைந்தனர்.

போட்டியில் கலந்து கொண்ட பலர், அறை விழுந்து முகம் வீங்கி காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் அடி தாங்காமல் மயங்கியதால் வெளியேற்றப்பட்டார்.

366 total views