பிரபல டென்னிஸ் வீரர் போன்றே விளையாடிக் காட்டும் சிறுவனின் காணொளி!

Report

பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரைப் போன்றே அசைவுகளைச் செய்யும் சிறுவனின் காணொளி வைரலாகி வருகிறது.

பெடரரின் சாதனைக்கு மெருகேற்றும் வகையில் சிறப்பு நாணயத்தை வெளியிட ஏடிபி முடிவு செய்துள்ளது. இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், சிறுவன் ஒருவன் டிவியில் ரோஜர் பெடரரின் ஆட்டத்தைக் கண்டு அச்சு அசலாக அவரைப் போலவே நடித்துக் கொண்டிருக்கும் காணொளியையும் ஏடிபி வெளியிட்டுள்ளது.

அடுத்த தலைமுறைக்கு டென்னிஸ் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

655 total views