பாடசாலையொன்றிலிருந்து இரண்டு குண்டுகள் மீட்பு!

Report

ஹொங்கொங்கில் உயர் பாடசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு வெடி குண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலையின் காவலாளி ஒருவர் வழங்கிய தகவலுக்கிணங்கவே மேற்படி இரண்டு குண்டுகளையும் மீட்டெடுத்த பொலிஸார், அது வெடிக்க தயாரான நிலையில் இதன்போது இருந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த இரண்டு குண்டுகளம் 22 பவுண்ட்ஸ் எடை கொண்டவை ஆகும். அத்துடன், இந்த குண்டுகளுக்கும் எமது பாடசாலை ஊழியர் மற்றும் மாணவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

488 total views