சீனாவில் 2 பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை!

Report

சீனாவில் 2 பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தைபாவில் (Taipa) இருந்து மக்காஓ (Macao) வரை இந்த ரயில் சேவை முதல் கட்டமாக இயக்கப்படுகிறது. 9.3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில், 11 நிறுத்தங்கள் உள்ளன.

குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்டவற்றை கடந்து செல்லும் இந்த ரயிலில், இம்மாதத்திற்கு மட்டும் இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆர்வமுடன் பயணம் செய்தனர்.

தினந்தோறும் 20 ஆயிரம் பேர் பயணிக்கும் வகையிலான இந்த ரயில் சேவை, மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

541 total views