நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

Report

நியூசிலாந்து வௌ்ளைத்தீவு எரிமலை வெடிப்பின் போது உயிரிழந்தவர்களின் நினைவாக நியூசிலாந்தின் விரிகுடாவில் உள்ள நீர்முனையில் பூச்செண்டுகளை வைத்து மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

நியூஸிலாந்தில் கடந்த திங்கட்கிழமை எரிமலை ஒன்று வெடித்ததில் 6 பேர் உயிரிழந்ததாகவும் 8 பேர் காணாமற் போனதாகவும் 30 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்

இந்நிலையில், இந்த சம்பவத்தில் 13 பேர் இதுவரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் 8 பேரின் உடல்களை அங்கிருந்து மீட்பதற்கு எரிமலை குமுறல் பாரிய அச்சுறுத்தலாக இருப்பதாக நேற்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், மீட்பு முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியுமா என்பதை தீர்மானிக்க அவரச கூட்டம் இன்று இடம்பெறும் என அறிவித்துள்ளார்.

குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்று 2 நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போதும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

531 total views