

சவூதி அரேபியா விமானிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை நிறுத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
புளோரிடாவிலுள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் பயிற்சி பெற்று வந்த சவூதி விமானப்படை விமானியினால் கடந்த மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்தனர்.
இதன்போது, குறித்த விமானி அமெரிக்க பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், புளோரிடாவிலுள்ள 3 தளங்கள் மற்றும் பிற பகுதியிலுள்ள தளங்களில் சவூதி விமானிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் குறித்த அறிவிப்பு காரணமாக அங்கு பயற்சி பெற்று வந்த 300 சவூதி விமானிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகின்றது.