கிரீன்லாந்தில் அதிகமாக உருகி வரும் பனிக்கட்டி- உலகத்துக்கு சவாலாக அமையும் பேர் ஆபத்து ?

Report

கிரீன்லாந்து தீவில் பனிக்கட்டிகள் நாளுக்கு நாள் வேகமாக உருகி வருகின்றன. கடந்த 19990-களில் இருந்ததைவிட அங்கு தற்போது 7 முறை அதிகமாக பனிக்கட்டிகள் உருகி வருகின்றன.

கடந்த 26 ஆண்டுகளை கொண்ட செயற்கைக்கோள் பதிவுகளை ஆய்வு செய்த சர்வதேச அளவிலான துருவ பகுதிகளில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பில் இந்த தகவல் வெளி வந்துள்ளது.

இந்த உலகத்துக்கு சவாலாக அமைய போகும் விஷயங்களில் ஒன்றான அதிகரித்து வரும் கடல் மட்டத்தின் அளவு பிரச்சனை கிரீன்லாந்து தீவினாலும் இனி அதிகரிக்கும் என்று அவர்களின் ஆய்வு தகவல் கூறுகிறது.

இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக அளவில் கிரீன்லாந்தில் உருகும் பனிக்கட்டிகளால் மட்டும் கிட்டத்தட்ட 7 செ.மீ. அளவுக்கு கடல் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதனால், உலகமெங்கும் கடலோர பகுதிகளில் வாழும் பல மில்லியன் மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

643 total views