போட்டிக்கு நடுவே குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய வீராங்கனை! வைரல் புகைப்படம்

Report

மிசோரமில் போட்டிக்கு நடுவே ஒரு பெண் குழந்தக்கு தாய்ப்பால் ஊட்டிய புகைப்படம் வைரலாகியுள்ளது.

மிசோரம் மாநிலம் துய்கும் மாவட்டத்தை சேர்ந்தவர் கைப்பந்து வீராங்கனை லால்வென்ட் லுவாங்கி. இவர், மிசோரம் பகுதியில் நடந்த மாநில அளவிலான கைபந்து போட்டியில் கலந்து கொண்டார்.

லுவாங்கி கைபந்து வீராங்கனை மட்டுமல்ல ஒரு 7 மாத கைக்குழந்தையின் தாயும் கூட.இவர் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது போட்டிக்கு நடுவே தனது குழந்தைக்கு பாலும் கொடுத்தார்.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மிசோரம் மாநில அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ரோய்டி என்பவர் இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அந்த பெண்ணிற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், அவருக்கு ஊக்க தொகையாக ரூ10 ஆயிரமும் வழங்கினார்.

4895 total views