செய்தியாளர் கேட்ட கேள்வியால் கோபத்தில் பொங்கி எழுந்த இங்கிலாந்து பிரதமர்!

Report

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தான் பேட்டியளித்த போது செய்தியாளரின் செல்போனை பறித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் போரிஸ் ஜான்சன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, தனியார் செய்தி சேனல் செய்தியாளர் ஜோ பைக் என்பவர் லண்டன் அரசு மருத்துவமனையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை செல்போனில் போரிஸ் ஜான்சனிடம் காட்டி கடும் விமர்சனம் செய்தார்.

இதனால் கோபமடைந்த போரிஸ் ஜான்சன், ஜோ பைக்கின் செல்போனை பறித்து தனது சட்டை பையில் வைத்துக்கொண்டார். இந்த காட்சிகளை ஜோ பைன் தனது டுவிட்டரில் பகிர்ந்ததை அடுத்து, பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

1064 total views