உலகில் தனி சுதந்திர நாடாகிறது மூன்று லட்சம் மக்களைக் கொண்ட நாடு

Report

பப்புவா நியூ கினியாவின் ஓர் அங்கமாக இருந்து வரும் போகைன்வில், தனி சுதந்திர நாடாக பிரியவுள்ளது.

இயற்கை வளங்கள் நிறைந்த பிராந்தியமான போகைன்வில்லில், இன ரீதியாக பாரபட்சம் காட்டப்படுவதாகவும், பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதாகவும் கூறி, தனி நாடு கோரிக்கை எழுந்தது.

இதற்காக 1988ஆம் ஆண்டு முதல் 1997 வரை நடந்த உள்நாட்டு போரில் சுமார் 20ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு போகைன்வில் தன்னாட்சி அதிகாரத்தை பெற்ற நிலையில், தனி நாடு அமைப்பது தொடர்பாக அண்மையில் மக்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் தனி நாடு கோரும் முடிவுக்கு ஆதரவாக ஏராளமானோர் வாக்களித்தனர். இதனால் போகைன்வில் புதிய தனி நாடாக அமையவுள்ளது. போகைன்வில்லின் மக்கள் தொகை, சுமார் மூன்று லட்சம் பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

23420 total views