ஊழியர்களுக்கு ரூ.70 கோடி கிறிஸ்துமஸ் போனஸ் வழங்கிய தனியார் நிறுவனம்

Report

அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று சுமார் 70 கோடி ரூபாய் அளவுக்கு கிறிஸ்துமஸ் போனஸ் அளித்து தனது ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேரிலேண்ட் பகுதியில் இயங்கி வரும் செயிண்ட் ஜான் பிராப்பர்ட்டீஸ் எனும் அந்த நிறுவனம், கிறிஸ்த்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது ஊழியர்களுக்கு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அப்போது சிவப்பு நிற உறைகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய நிறுவன தலைவர் எட்வர்டு செயிண்ட் ஜான், அறிவித்தபடி அந்த உறைகளை பிரித்து பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

அந்த உறைகளில் ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் சுமார் 35 லட்ச ரூபாய் வீதம் போனஸ் வழங்கப்பட்டிருந்தது.

2318 total views