நேரலையில் பெண் செய்தியாளருக்கு அதிர்ச்சி தந்த வாலிபர்!

Report

அமெரிக்காவில் லைவ் நியூஸை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த பெண் செய்தியாளரை ஆபாசமாக தட்டிவிட்டு சென்ற நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பொதுவாக சம்பவ இடங்களில் செய்தியாளர்கள் நிகழ்வுகளை நேரலையில் தொகுத்து வழங்குவது வழக்கம். மழை, வெயில் என பாராமல் அசாதாரண சூழ்நிலைகளில் அவர்களது பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வெளிநாடுகளில் உள்ள செய்தி நிறுவனங்களிலும் அப்படிதான். ஆனால் அங்கு செய்தியாளர்கள் லைவில் பேசிக்கொண்டிருக்கும்போது நிறைய சுவாரஸ்யங்களும், முகம் சுளிக்க வைக்கும் நிகழ்வுகளும் நடப்பது வழக்கம். இருப்பினும் அவற்றை பொருட்படுத்தாமல் அப்படியே ஒளிபரப்புவார்கள்.

அதுபோல அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. அப்போது அங்குள்ள பிரபல தொலைக்காட்சியின் செய்தியாளர் அந்த போட்டியை லைவில் தொகுத்து வழங்கி வந்தார்.

அந்த சமயத்தில் அவருக்கு பின்னால் மாரத்தானில் கலந்துகொண்ட அநேக இளைஞர்கள் ஓடுகின்றனர்.

சிலர் கேமராவை பார்த்து கை அசைத்தும் சென்றனர். அப்போது ஒரு நபர் அந்த பெண் செய்தியாளரின் பின்புறம் தட்டிவிட்டு செல்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் நேரலையில் இருப்பதால் எதுவும் பேசமுடியாமல் வாயடைத்து நிற்கிறார். இந்த நிகழ்வும் அப்படியே அந்த சேனலில் ஒளிபரப்பாகியது.

பின்னர் அந்த நபரை குறித்து விசாரிக்கப்பட்டதில், அவர் ஜார்ஜியா மாகாணத்தின் அமைச்சர் என தெரிய வந்தது. இதனால் அவர் மீது பல்வேறு கண்டங்கள் எழுந்தன.

இதையடுத்து தான் செய்த செயலுக்கு அவர் டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது '' நான் பெண் செய்தியாளரின் முதுகில் தான் அடித்துவிட்டு செல்வதாக இருந்தேன். ஆனால் தெரியாமல் கை தவறாக பட்டுவிட்டது.

இதற்காக நான் அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். வெளிநாடுகளில் பெண் செய்தியாளர்களுக்கு இதுபோன்று பல தொந்தரவுகள் இதுவரை நடந்துள்ளது.

ஆனால், தாங்கள் பேசுவது நேரலையில் ஒளிபரப்பப் படுவதால் சில நேரங்களில் அவர்களால் ரோமியோக்களை எதிர்த்து கேள்வி கூட கேட்க முடியாமல் போகிறது.

6921 total views