தன்னை பதவி நீக்கம் செய்ய முயல்வது நியாயமற்றது - டிரம்ப் காட்டம்

Report

ஒரு தவறும் செய்யாத தன்னை பதவிநீக்கம் செய்ய முயல்வது சிறிதும் நியாயமற்றது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்து வரவிருக்கும் அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் ஜோ பிடன் மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்குமாறு, உக்ரைன் அரசை அதிபர் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனடிப்படையில், ட்ரம்பை பதவிநீக்கம் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானம், தற்போது எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மை வகிக்கும் பிரதிநிதிகள் சபைக்கு சென்றுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஒரு தவறும் செய்யாத தன்னை பதவிநீக்கம் செய்ய முயற்சிப்பது நியாயமில்லை என கூறியுள்ளார்.

மேலும், வெறுக்கத்தக்க கட்சியாக உருவெடுத்துள்ள ஜனநாயக கட்சியினர், நாட்டிற்கு தீங்கானவர்கள் எனவும் டிரம்ப் சாடியுள்ளார்.

1536 total views