
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், டிசம்பர் 18 முதல் 20ஆம் நாள் வரை மக்கௌவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான அவர் அப்போது, மக்கௌ தாய்நாட்டுடன் இணைந்ததன் 20ஆவது ஆண்டு நிறைவு மாநாடு மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 5ஆவது அரசின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளார்.
மேலும், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தையும் அவர் மேற்பார்வை செய்ய உள்ளார்.