தாயைப்போல உடையணிந்து மகன் செய்த காரியம்..பின்பு நடந்த சோகம்

Report

பிரேசிலைச் சேர்ந்த ஒருவர், தனது தாய்க்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, தாயைப் போலவே உடையணிந்து ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

ஹெய்டார் ஸைவ் என்ற நபரின் தாய், கார் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் தொடர்ந்து 3 முறை தோல்வியடைந்துள்ளார்.

தாயின் ஆசையை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என நினைத்த அந்நபர், தனது 60 வயது தாயைப்போலவே உருமாறினார்.

உடைகள், நகைகள், நகப்பூச்சு, போலியான தலைமுடி ஆகியவற்றை அணிந்த அவர், தனது தாய்க்கு பதிலாக கார் ஓட்டச் சென்றுள்ளார்.

ஆனால், அங்கிருந்த அதிகாரிகளுக்கோ, புகைப்படத்திற்கும், நிஜத்தில் உள்ளவருக்கும் வேறுபாடு தெரிந்ததால் அவரை சோதனை செய்தனர். சோதனையில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.

2962 total views