உலகின் மிக உயரமான கட்டிடத்தில் மின்னல் தாக்கியது!

Report

துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடத்தின் உச்சியை மின்னல் தாக்கும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக துபாயில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் மாலை வேலையில், நகரின் பல இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் இருண்டது.

அந்த நேரத்தில், 2 ஆயிரத்து 720 அடி உயர புர்ஜ் கலீஃபா கட்டிடத்தை மின்னல் தாக்கும் காட்சியை புகைப்பட கலைஞர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

சோஹைப் அஞ்சும்(Zohaib Anjum) என்ற அந்த புகைப்படக் கலைஞர், 7 ஆண்டுகளாக புர்ஜ் கலீஃபாவுக்கு அருகே முகாமிட்டு மழை பெய்யும் போதெல்லாம் காத்திருந்து இந்த அரிய காட்சியை படம்பிடித்தாக தெரிவித்துள்ளார்.

துபாய் இளவரசர் ஷேக் ஹம்தனும் (Sheikh Hamdan) இதை காட்சிப்படுத்தி தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

696 total views