இரண்டாகப் பிரிகிறதா ஆப்பிரிக்க கண்டம்? ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!

Report

புவியின் நிலவியல் வரைபடத்தில் இருக்கும் ஆப்பிரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைத்துப் பார்த்தால் அவை கச்சிதமாக பொருந்துவதைப் பார்க்கலாம்.

138 மில்லயன் வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து பிரிந்து உருவானதே தென் அமெரிக்கா கண்டம்.

புவி தோன்றி பல லட்சம் ஆண்டுகளைக் கடந்தும் மனிதனால் இயற்கையின் பல செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதில் சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது.

புவி தன்னைத்தானே மாற்றிக்கொண்டே இருக்கக்கூடிய நிகழ்வு அது தோன்றிய போதிலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

சில நேரங்களில் அவற்றைக் கவனிக்கிறோம். பல நேரங்களில் நமக்கு தெரியாமல் சிறிய சிறிய மாற்றங்களாக நிகழும்.

அதன் விளைவு மிகப்பெரியதாக வரும்பொழுது தான் நாம் அதனைக் கவனிக்கிறோம். அப்படி ஒரு நிகழ்வுதான் ஆப்பிரிக்க கண்டத்தில் நிகழ்ந்திருக்கிறது.

ஆப்பிரிக்காவின் தென்மேற்கு கென்யாவில் மிகப்பெரிய பிளவுகள் நிலத்தில் திடீரென தோன்றியுள்ளன. அதுமட்டுமில்லாமல் அந்தப் பிளவின் நீளம் பல கிலோ மீட்டர்களுக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஆப்பிரிக்க கண்டம் இரண்டாகப் பிரிவதற்கான அறிகுறியே இந்தப் பிளவு என்று கூறுகின்றனர் புவியியல் வல்லுநர்கள்.

கடந்த மார்ச் 19ல் கென்யாவின் தென்மேற்குப் பகுதியான கென்யா பிளவு பள்ளத்தாக்கு பகுதியில் 50 அடிக்கும் அதிகமான ஆழத்திற்கும் 50 அடிக்கும் அதிகமான அகலத்திற்கும் பிளவு ஏற்பட்டுள்து.

அந்தப் பகுதியோடு நில்லாமல் ஏடன் வளைகுடாவில் இருந்து ஜிம்பாப்வே வரை 3000 கீமி தூரத்திற்கு இந்தப் பிளவு தொடர்ந்துள்ளது. அதோடு நில்லாமல் இன்னும் அதன் தூரம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

ஆப்பிரிக்க கண்டத்தின் கீழே இருக்கும் நிலையில்லாத டெக்டானிக் தட்டுக்களே இதற்குக் காரணம் என புவியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆப்பிரிக்காவின் பெரும்பான்மையான பகுதி ஆப்பிரிக்க தட்டின் மீதும் மீதமுள்ள சிறிய பகுதியான கிழக்கு ஆப்பிரிக்காவானது சோமாலி தட்டின் மீதும் அமைந்துள்ளன. ஆப்பிரிக்க தட்டானது நுபியன் தட்டு என்று அழைக்கப்படுகிறது.

இந்த சோமாலித் தட்டானது நுபியன் தட்டிலிருந்து 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நகரத் தொடங்கிவிட்டது. ஆண்டுக்கு 2.5செமீ என்ற அளவில் நகர்ந்து கொண்டிருந்த சோமாலி தட்டின் செயல்பாடுகளை இப்போது தான் நாம் பார்த்திருக்கிறோம்.

மேலும், புவியின் மேற்பரப்பிற்குக் கீழ் இருக்கும் லித்தோஸ்பியர் எனப்படும் பகுதியின் பாறைக் கோளங்கள் பல்வேறு தட்டுக்களாக உடைந்து ஒன்றோடொன்று உரசாமல் பயணிக்கின்றன. அவைதான் டெக்டானிக் தட்டுக்கள்.

அவற்றின் வேகமும் சீராக இருக்கின்றன. லித்தோஸ்பியர் மீது ஏற்படும் விசைகள் அதனைக் கடினமானதாக மாற்றினாலும் அவை டெக்டானிக் தட்டுகளிலும் பிளவு ஏற்படுத்தும்.

இதனால் அதன் செயல்பாட்டில் பிரச்சனைகள் ஏற்பட்டு நில அதிர்வு போன்ற சில பிரச்னைகள் ஏற்படுகின்றன.

கென்யா பிளவு பள்ளத்தாக்கானது அடிக்கடி சிறிய நில அதிர்வுகளைச் சந்திக்கும் பகுதியாகும். மேலும், சுஸ்வா எனும் எரிமலையும் இந்த பகுதிக்குள்தான் இருக்கிறது.

எரிமலை வெடிப்பு, தொடர்ச்சியான நில அதிர்வு போன்ற காரணிகளும் இந்தப் பிளவிற்கு உதவியுள்ளன என்கின்றனர் நில அதிர்வு மற்றும் புவியியல் வல்லுநர்கள்.

புவித் தோன்றியபோதே முற்றிலும் கடலால் சூழப்பட்ட ஒரே ஒரு நிலப்பரப்பு மட்டுமே இருந்தது என நாம் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறோம். கோண்டுவானா எனக் கூறப்படும் அந்த நிலப்பரப்புதான் உடைந்து பல்வேறு கண்டங்களும் உருவாகியது.

அதுபோன்று தான் இந்த நிகவும் என்கின்றனர் ஆய்வாளர்கள். புவியின் நிலவியல் வரைபடத்தில் இருக்கும் ஆப்பிரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைத்துப் பார்த்தால் அவை கச்சிதமாக பொருந்துவதைப் பார்க்கலாம்.

138 மில்லயன் வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து பிரிந்து உருவானதே தென் அமெரிக்கா கண்டம். அதனால்தான் அவை பொருந்தி போகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2792 total views