2050ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கோளுக்கு செல்லும் 10 லட்சம் பேர்!

Report

வருகிற 2050ஆம் ஆண்டுக்குள், 10 லட்சம் பேரை செவ்வாய் கோளுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயத்துள்ளதாக, ஸ்பேஸ் எக்ஸ் ((SpaceX)) நிறுவன தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் ((Elon Musk)) தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், SN1என்று பெயரிடப்பட்ட விண்வெளி ஓடத்தை கட்டமைக்கும் பணிகள், டெக்ஸ்சாசில் உள்ள மையத்தில், நடைபெற்று வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆண்டுக்கு 100 விண்வெளி ஓடங்களை தயாரிக்க திட்டமிடுவதாகவும், இதன்மூலம், 10 ஆண்டுகளில், ஆயிரம் விண்வெளி ஓடங்கள் தயாராகி விடும் என்றார்.

100 டன் எடையை, செவ்வாய் கோளின் சுற்றுவட்டப்பாதைக்குக் சுமந்து செல்லும் வகையிலேயே, ஒவ்வொரு விண்வெளி ஓடத்தையும் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

1085 total views