பாகிஸ்தானை போட்டுத் தள்ள தயாராகும் அமெரிக்கா

Report

அதேபோல் 38 முறைக்கும் மேலாக அமெரிக்காவில் ராணுவம் பயன்படுத்தும் கருவிகள் , சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார் .

அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுகணை மற்றும் தொழில்நுட்ப தகவல்களை சட்டவிரோதமாக பாகிஸ்தானியர்கள் திருடியதாக அமெரிக்கா பாதுகாப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது . ஆனால் இந்த தகவலை பாகிஸ்தான் முற்றிலுமாக மறுத்துள்ளது .

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன .

அந்த இயக்கங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் நாடுகளின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.

அதே போன்று பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் பதுங்கி பயிற்சி பெற்று வருவதாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன .

தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என பல ஆண்டுகளாக இந்தியா தெரிவித்துவரும் நிலையில் தற்போது அதேபோன்ற குற்றச்சாட்டை அமெரிக்காவும் பாகிஸ்தான் மீது வைத்துள்ளது

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி ஜான் சி டெமர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , பிரிட்டன் , ஆங்காங் , கனடா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்கள் 5 பேர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்க தொழில்நுட்பத்தை திருடி அனுப்பியுள்ளனர்.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை மீறி தொழில்நுட்ப தகவல்களை திருட இப் பாகிஸ்தானியர்கள் துணைபோயுள்ளனர் என ஜான்சி டெமர்ஸ் அதில் கூறியுள்ளார் .

அதேபோல் 38 முறைக்கும் மேலாக அமெரிக்காவில் ராணுவம் பயன்படுத்தும் கருவிகள் , சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார் . அமெரிக்காவின் இந்த அதிரடி குற்றச்சாட்டை பாகிஸ்தான் முற்றிலுமாக மறுத்துள்ளது .

சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பாகவே அணுஆயுத தொழில்நுட்பங்களை , வடகொரியா , ஈரான் , லிபியா உள்ளிட்ட நாடுகளுக்கு திருடி கொடுத்ததாக பாகிஸ்தான் விஞ்ஞானி மீது குற்றச்சாட்டு எழுந்தது .

1980ம் ஆண்டுகளில் அணுகுண்டு தயாரிக்கும் பலம் பெற்ற நாடாக மாறிய பாகிஸ்தான் அனு ஆயுத தடை சட்டத்தை மீறி தனது நட்பு நாடுகளுக்கு உதவியது பின்னரே தெரிய வந்தது . பாகிஸ்தான் வீரர்கள் பல்வேறு சர்வதேச நாடுகளில் ஊடுருவி அந்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை திருடிவருவது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது .

இதை கண்டுபிடித்துள்ள அமெரிக்கா பாகிஸ்தானுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன், தீவிரவாத ஒழிப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில் அமெரிக்கா தன் பார்வையை தற்போது பாகிஸ்தான் பக்கம் திருப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது

11611 total views