கருப்புப் பெட்டியை ஒப்படைக்க ஈரான் சம்மதம்

Report

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டியை உக்ரைனிடம் ஒப்படைக்க ஈரான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் தேதி ஈரான் தலைநகர் டெக்ரானில் உக்ரைன் விமானம், ஏவுகணைகளால் தகர்க்கப்பட்டதில் 176 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டியை அந்நாட்டிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

கருப்புப் பெட்டி ஒப்படைக்கப்பட்ட பின் ஈரான், கனடா மற்றும் உக்ரைன் நிபுணர்கள் குழு, விமானத்தின் தரவு மற்றும் குரல் ரெக்கார்டர்களை ஆய்வு செய்யும் என்றும் இந்த முயற்சி தோல்வியடையும் பட்சத்தில் பிரான்சிடம் கருப்புப் பெட்டி ஒப்படைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும் என்றும் ஈரான் அரசு கூறியுள்ளது.

1215 total views