850 விமான சேவைகள் ரத்து

Report

அமெரிக்காவின் சிகாகோ நகரில் கடும் பனிப்புயல் வீசி வருவதனால் அந்நாட்டின் 850 விமானங்களின் போக்குவரத்துச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடுங் குளிரால் அங்குள்ள மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.மேலும் ஒஹேர் விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சிகாகோ நகரம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

8812 total views