உலகின் மிகவும் குள்ள மனிதர் மரணம்!

Report

நேபாள நாட்டின் பாக்லங் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரா தாபா மகர். 27 வயது நிரம்பிய இளைஞரான இவர் தான் உலகின் மிகவும் குள்ளமான மனிதராக இருந்து வந்தார்.

67 அங்குல உயரம் கொண்ட இவரது எடை 6 கிலோ ஆகும். உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த நபர் என அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் கடந்த 2010ம் ஆண்டு கஜேந்திரா தாபா மகர் இடம் பெற்றார்.

அதன்பிறகு அதே நேபாள நாட்டைச் சேர்ந்த சந்திர பகதூர் டாங்கி உயரம் குறைந்தவராக கண்டறியப்பட்டார்.

சந்திர பகதூர் டாங்கியின் உயரம் 54.6 செ.மீ ஆகும். இதையடுத்து உலகின் உயரம் குறைத்த மனிதர் என்கிற பட்டத்தை கஜேந்திரா தாபா மகர் இழந்த நிலையில் 2015 ம் ஆண்டு சந்திர பகதூர் மரணடமடைந்தார்.

அதன்பின் மீண்டும் உயரம் குறைத்த நபராக கஜேந்திரா தாபா மகர் விளங்கி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியின்றி காணப்பட்ட கஜேந்திரா தாபா மகர், அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

3230 total views