250 கிலோ எடையுள்ள ஐ.எஸ் பிரமுகர் கைது!

Report

ஈராக்கில் 250 கிலோ எடை கொண்ட ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினரை அந்த நாட்டு இராணுவம் கைது செய்துள்ளது.

ஈராக் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன.

இதுதவிர, ஐ.எஸ் அமைப்பிற்கு பெரும் தலையிடியாக ஈரான் செயற்பட்டு வருகிறது. அமெரிக்க தாக்குதலில் ஈரான் தளபதி சுலைமானி உயிரிழந்த பின்னர், ஐ.எஸ் அமைப்பிற்கு சற்று உற்சாகம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அதிக எடையுள்ள ஐ.எஸ் முக்கியஸ்தர் ஒருவரை இராணுவம் கைது செய்துள்ளது.

ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவராக முப்தி அபு அப்துல் பாரி என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.

ஏறக்குறைய 250 கிலோ உடல் எடை கொண்ட அவர் பாதுகாப்பு படையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியும் வந்துள்ளார்.

அவரை ஈராக்கிய பாதுகாப்பு படையை சேர்ந்த ஸ்வாட் குழு மொசூல் நகரில் வைத்து கைது செய்தது. ஆனால் கைது செய்யப்பட்ட முப்தியை காரில் ஏற்ற முடியவில்லை.

அதிக உடல் எடையுடன் குண்டாக இருந்த முப்தியை காருக்குள் ஏற்ற மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்த நிலையில், லொறி ஒன்றில் அவரை ஏற்றி கொண்டு சென்றனர்.

ஐ.எஸ். அமைப்பினருக்கு விசுவாசமுடன் செயல்படாத இஸ்லாமிய மதபோதகர்களை கொல்வதற்கான உத்தரவுகளையும் (பத்வா) முப்தி பிறப்பித்து உள்ளார் என ஈராக்கிய பொலிசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

4161 total views