லெபனானில் தொடரும் ஆர்ப்பாட்ட மோதல்கள்-பலர் காயம்

Report

லெப­னா­னிய தலை­நகர் பெய்­ரூட்டில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தின்போது கலகத் தடுப்­பு பொலி­ஸா­ருக்கும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்­கு­மி­டையே உக்­கிர மோதல் இடம்­பெற்­றுள்­ளது.

இதன்­போது ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் பொலிஸார் மீது கற்­க­ளையும் ஏனைய பொருட்­க­ளையும் வீசி2யதை அடுத்து பொலிஸார் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களைக் கலைக்க கண்­ணீர்ப்­புகை, தண்­ணீர்ப் பிர­யோ­கங்­களை மேற்­கொண்­டதுடன், இறப்பர் துப்­பாக்கி ரவைப் பிர­யோ­கமும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்த மோதல்­களில் குறைந்­தது 145 பேர் காய­ம­டைந்­த நிலையில் , சுமார் 45 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறவேண்­டிய நிலைக்­குள்­ளா­கி­யி­ருந்­தனர்.

அதேசமயம் உள்­நாட்டு தொலைக்­காட்சி ஊட­க­மான அல் ஜடீட்டைச் சேர்ந்த புகைப்­படக் கலைஞர் ஒருவர் உட்­பட இரு ஊட­க­வி­ய­லா­ள­ர்கள் பொலி­ஸாரின் இறப்பர் துப்­பாக்கி ரவைப் பிர­யோ­கத்தில் காய­ம­டைந்­துள்­ள­தாக அந்­நா­ட்டு அர­சாங்­கத்தால் செயற்­ப­டுத்­தப்­படும் தேசிய செய்தி முகவர் நிலையம் கூறு­கி­றது.

இதேவேளை இந்த மோதல்­களில் 530 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ள­தாக செஞ்­சி­லுவைச் சங்கம் தெரி­விக்­கி­றது.

பாரா­ளு­மன்­றத்­துக்கு அரு­கி­லுள்ள வீதி யில் நேற்று முன்­தினம் இரவு இடம்­பெற்ற மோதல்­களின்போது பொலிஸார் மேற்­கொண்ட கண்­ணீர்ப்­புகைப் பிர­யோ­கத்தால் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் பின்­வாங்கிச் சென்­ற­தாகவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அங்கு தோன்­றி­யுள்ள பொரு­ளா­ தார நெருக்­க­டி­க­ளுக்குக் கார­ண­மான அர­சியல் வகுப்­பி­னரை பத­வி­யி­லி­ருந்துவெளியேற்ற வலி­யு­றுத்தி அனைத்து மதப் பின்­ன­ணி­களைக்கொண்ட பிர­ஜை­களும் கடந்த வருடம் ஒக்­டோபர் 17ஆம் திக­தி­யி­லி­ருந்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் அந்­நாட்டு ஜனா­தி­பதி இந்த விவ­காரம் குறித்து தீர்­மானம் எடுக்க அவ­சர பாது­காப்புக் கூட்­ட­மொன்றை நேற்று கூட்டி கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.

நாடு நிதி நெருக்­க­டியில் சிக்­கி­யுள்ள நிலையில் அந்­நாட்டு அர­சியல் தலை­மைத்­துவம் அர­சாங்­க­மொன்றை ஸ்தாபிக்கத் தவ­றி­யுள்­ளமை குறித்து ஆர்ப்­பாட்­டக்­காரர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரு கின்றமை குறிப்பிடத்தக்கது.

587 total views