அமெரிக்கா மீதான தாக்குதல் கோழைதனமாக இருக்காது - இஸ்மாயில் கானி

Report

அமெரிக்காவின் முட்டாள் தனமான தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு இதுபோன்று ஒருபோதும் நாங்கள் அமெரிக்கா மீது கோழைத்தனமான தாக்குதலைமேற்கொள்ள மாட்டோம் என ஈரானின் குட்ஸ்படையனியின் புதிய தளபதி கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆனால் தக்க சமயத்தில் பதிலடி வழுங்குவோம்என ஈரானின் குட்ஸ் படையனியின் புதிய தலைவர் இஸ்மாயில் கானி மேலும் தெரிவித்துள்ளார்.

இதனைதனது பதவிகாலஅறிமுக விழாவிலேயே அவர் தெரிவித்தார்.

ஈரானின் முக்கிய இராணுவ தளபதியான சுலைமானியை கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் ஆளில்லா விமானதாக்குதல் மூலம் கொலை செய்தனர்.

அதேவேளை இருநாடுகளுக்குமிடையியே பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து ஈராக்கின் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதுல் நடத்தியது.

அத்தோடு குட்ஸ் படையின் புதிய தலைவர் அமெரிக்காவின் முட்டாள் தனமான இச்செயலுக்கு பழிவாங்குவதாக தெரிவித்ததை அடுத்து இரு நாடுகளுக்குமான போர்பதற்றம் சர்வதேச நாடுகளுக்குமிடைய மிகுதியான பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையிலேயேஇன்று கருத்து வெளியிட்ட ஈரானின் குட்ஸ் படையின் புதிய தளபதி, அமெரிக்காவுக்கு தக்க பாடத்தை புகுட்டுவதோடு, நாங்கள் ஒருபோதும் அமெரிக்கா மீதான தாக்குதலில் கோழைத்தனமானக செயற்பட மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

3898 total views