இந்திய செவிலியர் 30 பேருக்கு அதிர்ச்சி கொடுத்த கொரனோ வைரஸ்! அச்சத்தில் உறவினர்கள்

Report

உலகையே அச்சுறுத்தி வரும் கொரனோ வைரஸ் இந்திய செவிலியர் ஒருவரை தாக்கியிருப்பது வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரனோ என்ற வைரஸ் பொது மக்களிடையே பரவி வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.

இந்த சூழலில் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்த நபர்களின் மூலம் தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், சீனாவில் இருந்து பயணம் மேற்கொள்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை சீன அரசு நாடியுள்ளது.

இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக, சீனாவில் இருந்து வருபவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. இதற்கிடையில் சீனா செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த 30 செவிலியர்களுக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களில் 38 வயதான செவிலியர் ஒருவர் கொரனோ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை அறிந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தங்கள் மாநில செவிலியர்களின் உடல் நலனை காக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சூழலில் சவுதியில் உள்ள செவிலியர் ஒருவர் தொலைபேசி வாயிலாக ஊடகம் ஒன்றிற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதில், 30 பேர் இரு அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோம். தங்களுக்கு முறையான பரிசோதனைகள் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இதனையறிந்த, பாதிக்கப்பட்ட செவிலியர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகள் நிலை பற்றி சரியான தகவல் தெரிவிக்குமாறு மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரனோ வைரஸ் எப்படி சவுதிக்கு பரவியது என்று சரியாக தெரியவில்லை. உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பாதிப்பால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

1723 total views