காட்டுத் தீ எதிரொலி! வாழ்விடங்களை இழந்த லட்சக்கணக்கான வவ்வால்கள்

Report

ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் லட்சக்கணக்கான வவ்வால்கள் தஞ்சமடைந்துள்ளதால் பொது மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அந்நாட்டில், பற்றி எரியும் புதர்த் தீயால் பல ஆயிரம் ஏக்கரிலான காடுகள் சேதமடைந்துள்ளன.

இதனால், வாழ்விடங்களை இழந்துள்ள லட்சக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள் நகர்புறங்களை நோக்கி படையெடுத்துள்ளன. இந்த நிலையில், இங்காம் நகரத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸை மருத்துவமனையில் தரையிறங்கவிடாமல் நூற்றுக்கணக்கான வவ்வால்கள் வானில் வட்டமிட்டன.

இரவு நேரங்களில் இந்த வவ்வால்கள் மருத்துவமனை, பள்ளிக்கூடங்களில் தஞ்சம் புகுந்துவிடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

1669 total views