மூன்று குழந்தைகளின் சடலங்கள் தொடர்பான தீவிர விசாரணை!

Report

அயர்லாந்தின் டப்ளினில் உள்ள நியூகேஸில் உள்ள வீடொன்றிலிருந்து மூன்று குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை குறித்து அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

டப்ளினின் நியூகேஸில் பார்சன்ஸ் கோர்ட்டில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று மாலை 7 மணிக்குப் பிறகு குறித்த மூன்று குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதேவேளை, அவசர பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, தோட்டத்தில் இருந்த 40 வயது மதிக்கதக்க பெண்னொருவரை மீட்டு டல்லாக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது, ஆனால் உயிர் பிழைப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இப்பெண் மூன்று குழந்தைகளின் தாய் என்றும், சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் நால்வரும் வசித்து வந்ததாகவும், அனைவரும் அயர்லாந்தை சேர்ந்தவர்கள் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது, மாநில நோயியல் நிபுணர்களுடன் இணைந்து, விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

1236 total views