சிரியா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலி

Report

சிரியாவில் இடம்பெற்ற தாக்குதலில் சுமார் 40 ராணுவ வீரர்கள் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ரஷ்ய ராணுவ அமைச்சகம் தரப்பில், “ கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இட்லிப் மாகாணத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 40 சிரிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மாரட் அல் நுமன் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் ராணுவ தளங்களை குறிவைத்து குண்டு வெடிப்பை நடத்தினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

கிளர்ச்சியாளர்கள் குண்டு வெடிப்பை நடத்தியதாக தெரிவித்துள்ள சிரிய அரசு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும் சன்னிபிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு முதல்உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும், சன்னி பிரிவு கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளனர் என்றும்சிறுவர்கள் போரில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றும் சிறுமிகள் பாலியல் அடிமைகளாக மாற்றப்படுகின்றனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மேலும்அரசு, கிளர்ச்சிப் படைகள் என இருதரப்பினரும் மனிதஉரிமைகளை மீறி வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

1580 total views