ஈராக்கில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

Report

ஈராக்கின் பல இடங்களில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பெரும் கலவரம் மூண்டது.

அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈராக்கின் பல்வேறு பகுதிகளில், அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

இந்தநிலையில், பாக்தாத் மற்றும் நஸ்ஸிரியாவில் (Nassiriya) போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கானோர், டயர்களை எரித்தும், கோஷமிட்டும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதில், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1062 total views