பாகிஸ்தானுக்கு கொரோனா வைரஸை கொண்டு வந்த சீனர்கள்! அச்சத்தில் மக்கள்

Report

நால்வரும் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகக் காணப்படும் வுஹான் நகரைச் சேர்ந்தவர்கள். சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் நான்கு பேரைத் தொற்றியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 56 பேரைக் கொன்றிருக்கிறது. 1,975 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படும் வனவிலங்குகளின் இறைச்சியிலிருந்து இந்த வைரஸ் பரவ ஆரம்பித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதனால், இறைச்சி விற்பனைக்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பீஜிங்கில் இன்று பேட்டி அளித்த அந்நாட்டு சுகாதார ஆணைய அமைச்சர் மா ஜியாவொய், கொரோனா வைரஸின் பரவும் தன்மை வேகமாக வலுவடைந்து வருகிறது எனத் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் பற்றி குறைவான விவரங்களே தெரிந்திருக்கிறது என்றும் வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் தெளிவாகக் கண்டறியப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டிலும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் தேசிய சுகாதாரக் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், பாகிஸ்தானில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப்படவில்லை என்று கூறியிருக்கிறது.

ஆனால், முல்தான் மற்றும் லாகூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சீனாவைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்றும் தெரிவித்திருக்கிறது.

முல்தான் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் சீனாவிலிருந்து துபாய் சென்று, பின் ஜனவரி 21ஆம் தேதி கராச்சிக்கு வந்தார் எனவும் அங்கிருந்து முல்தான் வந்திருக்கிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

மற்ற மூவர் லாகூர் சர்வீசஸ் மருத்துவமனையில் தனி பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். நால்வருமே சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகக் காணப்படும் வுஹான் நகரைச் சேர்ந்தவர்கள்.

2095 total views